உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐம்பொன் சிலைகள் குளத்தில் கண்டெடுப்பு!

ஐம்பொன் சிலைகள் குளத்தில் கண்டெடுப்பு!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே, குளத்தில் மீன் பிடித்தபோது, வலையில், இரண்டு ஐம்பொன் சிலைகள் சிக்கின. தஞ்சாவூர் அருகே, ரெட்டிபாளையம் அடுத்த காமாட்சிபுரத்தில், பரசுராமர் குளம் உள்ளது. இந்த குளத்தில், நேற்று காலை, அதே ஊரைச் சேர்ந்த சிலர், மீன் பிடித்தனர். அப்போது, வலையில் ஒரு அடி உயரம் உள்ள புத்தர் அவலோகி தேஸ்வரர் சிலைகள் சிக்கின. தகவல்அறிந்த, வருவாய்த் துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று, சிலைகளை மீட்டனர். தொல்வியல் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின், சிலைகள் பற்றிய முழு விவரம் தெரியவரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !