பெருஞ்சேரி நவக்கிரக கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4189 days ago
ஊத்துக்கோட்டை : பெருஞ்சேரி, நவக்கிரக கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, பெரிஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது வினாயகர் கோவில். இக்கோவில் வளாகத்தில், கிராம மக்கள் பங்களிப்புடன் புதிதாக நவக்கிரக கோவில் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து, நேற்று காலை கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, கடந்த, 6ம் தேதி, கணபதி பூஜை, வாஸ்து பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மறுநாள், 7ம் தேதி கங்கா பூஜை முருத்யம், அகண்ட தீபாராதனை, கலச பிரதிஷ்டை, அக்னி பிரதிஷ்டை, மூலமந்திரம், நெய்வேத்யம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, காலை, 7:00 மணிக்கு, விக்கிரக பிரதிஷ்டை நாடி சந்தானம், பூர்ணாஹூதி ஆகிய நிகழ்ச்சிகளும், இதைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.