நல்லாத்தூரில் சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா
ADDED :4136 days ago
நெட்டப்பாக்கம்: நல்லாத்துார் சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் 13ம் தேதி குருபெயர்சி விழா நடக்கிறது. ஏம்பலம் அடுத்துள்ள நல்லாத்துார் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் 13ம் தேதி குருபெயர்ச்சி விழா நடக்கிறது. இதையொட்டி அன்று மாலை 4.30 மணிக்கு குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 5.57 மணிக்கு குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசிப்பதையடுத்து, குருபகவானுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து பரிகார அர்ச்சனையும் நடக்கிறது.