உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரம்பலூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்!

பெரம்பலூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்!

பெரம்பலூர்: கிருஷ்ணாபுரம், மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம், நேற்று வெகு விமரிசையாக நடந்தது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா சுவேத நதியின் தென்புறம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா கடந்த, 2ம் தேதி பூ சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த, 6ம் தேதி மதியம், 3 மணிக்கு செல்லியம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு பூஜை, 7ம் தேதி மதியம், 3 மணிக்கு மதுரைவீரன், அய்யனார், அம்சவள்ளி பரிவார தெய்வங்களுக்கு பொங்கல், மாவிளக்கு, 8ம் தேதி, 5 மணிக்கு, மகா மாரியம்மன் குடியழைத்தலும், 9 மணிக்கு காப்புக்கட்டுதலும் நடந்தது. அன்று இ ரவு, 10 மணிக்கு மகா மாரியம்மன் சிங்க வாகனத்தில் திருவீதி உலா, வாண வேடிக்கை, கரகாட்டம், 9ம் தேதி மதியம், 12 மணிக்கு மகா மாரியம்மனுக்கு அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், 6 மணிக்கு பொங்கல், மாவிளக்கு, இரவு, 8 மணிக்கு வெட்டும், குதிரையில் மகா மாரியம்மன் திருவீதி உலாவும். நேற்று, 10.35 மணியளவில் திருத்தேரோட்டம் நடந்தது. இதில் கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, வெங்கனூர், வெங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் திருவிழாவையொட்டி மதியம், 1 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (11ம் தேதி) காலை, 10 மணியளவில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சியும், மதியம், 3 மணிக்கு மஞ்சல் நீராட்டுடன் விழாவை நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !