உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரம்பலூர் ராஜவிக்னேஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!

பெரம்பலூர் ராஜவிக்னேஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, மேலமாத்தூர் மருதையான் கோவில் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள ராஜவிக்னேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும், 12ம் தேதி நடக்கிறது.பெரம்பலூர்- அரியலூர் செல்லும் சாலையில், மேலமாத்தூர் மருதையான் கோவில் அருகே உள்ள ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், புதிதாக ராஜவிக்னேஸ்வரர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் மகா கும்பாபிஷேக விழா, இன்று (11ம் தேதி) காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் கணவதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. மாலை, 5 மணியளவில் யாக சாலை பூஜையும், மகா தீபாரானையும் நடைபெறுகிறது.தொடர்ந்து, 12ம் தேதி அதிகாலை, 5 மணியளவில் பூஜை தொடங்கி காலை, 7.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை, 9.30 மணிக்கு மகா அபிஷேகமும், மகா தீபாரானையும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !