உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியலூர் படைபத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்!

அரியலூர் படைபத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்!

அரியலூர்: அரியலூர் படைபத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம், நேற்று நடந்தது. அரியலூர், மேலதெருவில் உள்ள படைபத்து மாரியம்மன் கோவில், ஆண்டு திருவிழா, கடந்த, 2ம் தேதி துவங்கியது. கணபதி பூஜையுடன் துவங்கிய வைகாசி திருவிழா காப்பு கட்டுதல் உற்சவத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் அன்ன வாகனம், புன்னை மர வாகனம், நாக பாஷானத்தில் அம்மன் வீதிஉலா, யானை வாகனம், ஊஞ்சல் சேவை, கண்ணாடி பல்லக்கு, வெண்ணைதாழி, வெட்டுக்குதிரை வாகனத்தில் ஊர்வலம், படத்தேர் உள்ளிட்ட உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் நேற்று நடந்தது. பெரியாண்டவர் கோவிலில் இருந்து மாரியம்மன் கோவில் வரை நடைபெற்ற அக்னிசட்டி ஊர்வலத்தை தொடர்ந்து, நேற்று காலை, 9 மணிக்கு, வேலுசாமி, கோகுல்பாபு, ஆறுமுகம், முரளி உள்ளிட்ட மேலதெரு பக்தர்கள், வடம் பிடித்து தேரோட்டத்தை நடத்தினர். மேலத்தெரு பகுதியின் முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !