உளுந்தூர்பேட்டை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம்!
ADDED :4141 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண மகோற்சவம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு கைலாசநாதர் சுவாமி கோயிலில் இருந்து பெண் அழைப்பு தட்டு வரிசை புறப்பாடு நடந்தது. பின்னர் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நிகழ்ச்சியில் ராமகிருஷ்ண ஆசிரம தலைவர் அனந்தானந்தஜி மகாராஜ் சிறப்புரையாற்றினார். பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர், ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், நகர செயலாளர் துரை மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.