உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு!

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவுற்றது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் கடந்த 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்தது. மழை வேண்டி உற்சவம் நடத்தினர். 5 நாட்களும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மண்டகப்படி, சேவை, சாற்றுமுறை, நாலாயிர திவ்யபிரபந்தம் வாசிப்பு நடந்தது. தேசிக பட்டர் வழிபாட்டினை செய்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !