காளத்தீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா!
ADDED :4141 days ago
புதுச்சேரி: காளத்தீஸ்வரர் வரதராஜப் பெருமாள் கோவிலில் 11ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி, பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. மிஷன் வீதியில் உள்ள காளத்தீஸ்வரர் வரதராஜப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக 11ம் ஆண்டு விழாவையொட்டி, ஞானாம்பிகை சமேத காளத்தீஸ்வர சுவாமிக்கு நேற்று காலை 10:30 மணிக்கு 108 சங்கு அபிஷேகம் நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு சங்கல்பம், புண்யாஹம், ஹோமம், மகா சாந்தி, திருமஞ்சனம், மகா சாந்தி கட திருமஞ்சனம் நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பஞ்சமூர்த்திகள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வரதராஜப் பெருமாள் வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.