திட்டக்குடி அரங்கநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்!
ADDED :4141 days ago
திட்டக்குடி: திட்டக்குடி வதிட்டபுரம் அரங்கநாத பெருமாள் கோவிலில் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. திட்டக்குடி வதிட்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாதபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை சூர்ணாபிஷேகமும், திருபல்லக்கில் மோகினி அலங்காரத்தில் திருவீதியுலா நடந்தது. மாலை திருக்கல்யாண மஞ்சமும், சுவாமி திருக்கல்யாணமும் நடந்தது. சுதர்சன யக்ஞசிம்மம் வரத சிங்காச்சாரியார் சுவாமிகள் விழாவை நடத்தி வைத்தார். சுவாமி திருக்கல்யாண வைபத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து இன்று 11ம் தேதி திருத்தேர் விழா நடக்கிறது.