உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலியனூர் புத்துவாயம்மன் கோவிலில் தேர் திருவிழா

கோலியனூர் புத்துவாயம்மன் கோவிலில் தேர் திருவிழா

விழுப்புரம்: கோலியனூர் புத்துவாயம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை (13ம் தேதி) நடக்கிறது. விழுப்புரம் அடுத்த கோலியனூர் புத்துவாய்- ரேணுகாதேவி அம்மன் கோவில் தேர்த் திருவிழா, கடந்த 5ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினம் அன்னவாகனம், கற்பக விருட்சகம், பூதவாகனம் அம்மன் வீதியுலா நடந்தது. நாளை (13ம் தேதி) காலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை திருத்தேர் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஆய்வாளர் கவியரசு, ஊராட்சித் தலைவர்கள் திலகம், செந்தில்குமார் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !