உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடி கோயிலில் வைகாசி விசாக விழா

குன்றக்குடி கோயிலில் வைகாசி விசாக விழா

காரைக்குடி : குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில், வைகாசி விசாக திருநாள் கொண்டாடப்பட்டது.முருக பெருமானின் ஜென்ம நட்சத்திர விழாவான, வைகாசி விசாகத்திருவிழா, குன்றக்குடியில் நேற்று கொண்டாடப்பட்டது. முன்னதாக காலை 7 மணிக்கு, மலையிலிருந்து சுவாமி, வள்ளி, தெய்வானையுடன், கோயிலின் கீழ்வாசலுக்கு வெட்டி வேர் அணிந்து வந்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் சீர்வரிசையுடன், மடத்திற்கு சுவாமியை அழைத்து சென்றார். அங்கு, பழங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, கொலு மண்டப நீராழியில், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 11 மணிக்கு சந்தன அபிஷேகம் நடந்தது. இரவு 9 மணிக்கு வெள்ளி வாகனத்தில், சுவாமி வீதி உலா நடந்தது. அதை தொடர்ந்து மலைக்கு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !