விழுப்புரம் பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக விழா!
ADDED :4160 days ago
விழுப்புரம்: விழுப்புரம் பால முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு 108 சங் காபிஷேக விழா நடந்தது. விழுப்புரம் கிழக்குப் புதுச்சேரி ரோட்டிலுள்ள, பாலமுருகன் கோவிலில், நேற்று வைகாசி விசாகத் திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, வேதிகா பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. முருகப் பெருமான் ராஜ அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் பாலசுப்ர மணியம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.