திண்டிவனம் சிவன் கோவில்களில் நாளை குருபெயர்ச்சி விழா !
ADDED :4161 days ago
திண்டிவனம்: சிவன் கோவில்களில் நாளை மாலை குரு பெயர்ச்சி விழா நடக் கிறது. குரு பகவான் நாளை (13 ம் தேதி) மாலை 06.04 மணிக்கு, மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவிலில், நவ கிரக சன்னதியில் உள்ள குரு பகவானுக்கும், ஆதிகுரு தட்சணா மூர்த்திக்கும் மாலை மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், மாலை 6.04 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையதுறையினர் செய்து வருகின்றனர்.