உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரி பகவதி அம்மன் தெப்பத்திருவிழா!

கன்னியாகுமரி பகவதி அம்மன் தெப்பத்திருவிழா!

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வைகாசி விசாக விழாவின் நிறைவாக தெப்பத்திருவிழா நடந்தது.ஜூன் 2 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஒன்பதாம் நாளில் தேரோட்டம், 10ம் நாளில் ஆராட்டு நடைபெற்றது. கடற்கரையில் அமைந்து உள்ள ஆராட்டு மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் தேவி விக்ரகத்துடன் பூஜாரிகள் மூழ்கி எழுந்தனர்.நிறைவு நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தெப்பத்திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தெப்ப மண்டபத்துக்கு அம்மன் எழுந்தருளினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !