உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா!

திரவுபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா!

அவலூர்பேட்டை: கன்னலம் திரவுபதி அம்மன் கோவில் திடலில்  துரியோதனன் படுகள நிகழ்ச்சி  நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் கன்னலம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த மாதம் 4 ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.  20 ம்தேதி முதல் 10 நாள் வரையில் மகாபாரத சொற்பொழிவு, 12 நாள் நாடகம் நடந்தது. 3ம் தேதி  அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி , தினசரி அம்மன் வீதியுலா, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடந்தது 12 ம்தேதி பிற்பகலில் துரியோதனன் படுகளமும்  மாலையில் தீமிதியும்,  இரவு தர்மர் பட்டாபிஷேக நிகழ்ச்சிகளும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !