உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா!

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா!

கடலூர்: கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. திருப்பாதிரிப்புலியூர்  பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா  கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 8 நாட்களாக சுவாமி வீதியுலா நடந்து வந்தது. நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனையைத் தொடர்ந்து பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் காலை 8:00 மணிக்கு எழுந்த ருளினார்.  தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !