மணலூர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4156 days ago
சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த லால்புரம் மணலூர் செல்வ விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதனையெ õட்டி கடந்த 10ம் தேதி மாலை விநாயகர் பூஜை, அனுக்ஞையுடன் யாகசாலை பூஜை துவங்கி சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு இரவு 8:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. மறுநாள் காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும் தொடர்ந்து கடம் புறப்பாடு செய்து காலை 9:30 மணிக்கு செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை வெங்கடேச தீட்சிதர் தலைமையில் தீட்சிதர்கள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதியம் ”வாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை ÷ காவில் நிர்வாகி மற்றும் மணலூர் கிராம வாசிகள் செய்திருந்தனர்.