உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருமாரியம்மன் கோவிலில் ஜீர்ணோத்தாரன கும்பாபிஷேகம்!

கருமாரியம்மன் கோவிலில் ஜீர்ணோத்தாரன கும்பாபிஷேகம்!

செஞ்சி: செஞ்சி கருமாரியம்மன் கோவிலில் ஜீர்ணோத்தாரன மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி சேத்துப்பட்டு ரோட்டில் உள்ள விஷ்ணு கருமாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து புதிதாக கருமாரியம்மன், விநாயகர், பாலமுருகன், நவக்கிரகம் பிரதிஷ்டை செய்துள்ளனர். இதன்  ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு 11ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின. அன்று இரவு சுவாமி சிலைகள் பிரதிஷ்டையும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடந்தது.  நேற்று காலை 7 மணிக்கு மங்களம் சுப்புராம ஐயர், ஸ்ரீகாந்த் ஐயர் தலைமையில் கலச பிரதிஷ்டை செய்து விக்னேஷ்வர பூஜை, லட்சுமி பூஜை மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தன. 10 மணிக்கு மகா பூர்ணாஹூதி முடிந்து மகா கும்பாபிஷேகம் நடந்தது.   அறங்காவலர் சிவாஜி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !