உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வர் தேர்த்திருவிழா கோலாகலம்!

திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வர் தேர்த்திருவிழா கோலாகலம்!

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வர் கோவில், தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வர் வைகாசி விசாகத் தேர்திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு சமூகத்தார் சார்பில், மண்டப கட்டளை பூஜை நடந்தது. ஸ்வாமி, பூதவாகனம், அனுமன் வாகனம், மூஷிக வாகனம், வெள்ளி அன்ன வாகனங்களில், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து, விழாவின், பத்தாம் நாள் நிகழ்ச்சியாக, அர்த்தனாரீஸ்வர் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி திருத்தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார்.மாவட்ட போலீஸ் எஸ்.பி., செந்தில்குமார், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., செங்கோட்டையன், தாசில்தார் ராஜன், உதவி கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிவ கோஷத்துடன் தேரை இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !