தியாகதுருகம் பெருமாள் கோவிலில் வருஷாபிஷேக விழா!
ADDED :4140 days ago
தியாகதுருகம் : தியாகதுருகம் சீனுவாச பெருமாள் கோவிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.
தியாகதுருகம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனுவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடந்தது. வருஷாபிஷேக விழா கோவிலில் நடந்தது. விநாயகர், அயகிரீவர், துர்கை சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனையில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். சீனுவாச பட்டாச்சாரியார் பூஜைகளை செய்தார். சமுதாய பராமரிப்பு கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ராதாகிருஷ்ணன், ரங்கராஜிலு, அபரஞ்சி, பிச்சாண்டி பிள்ளை, முருகன், நல்லாப்பிள்ளை, சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.