திருவெண்ணெய்நல்லூர் பையூரில் குருபெயர்ச்சி சிறப்பு பூஜை!
திருவெண்ணெய்நல்லூர் அருகே தட்சணாமூர்த்தி கோவிலில் நேற்றுகுருபெயர்ச்சி சிறப்புபூஜைகள் நடந்தன.திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பையூர் கிராமத்தில் 12 அடி உயரத்தில்ஞானகுரு தட்சணாமூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மிதுனராசியிலிருந்து கடகராசிக்கு குரு பகவான் பிரவேசிப்பதை முன்னிட்டுஇக்கோவிலில் நேற்றுகுரு பெயர்ச்சி சிறப்புபூஜைகள் நடந்தன.மதியம் 2:00 மணிக்குவிநாயகர் பூஜை மற்றும்மகாசங்கல்பமும், மதியம்2:45 மணிக்கு கலசபூஜையும், குரு பரிகாரஹோமங்களும் நடந்தன.மாலை 4:35 மணிக்குமகாபூர்ணாஹூதி, தீபாராதனையும், மாலை 4:45மணிக்கு மகா அபிஷேகம்மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தன. மாலை 5:15மணிக்கு குரு பகவானுக்கு கலச அபிஷேகமும், மாலை 5:58மணிக்கு மகாதீபாராதனையும் நடந்தது.பரிகாரம் செய்ய வேண்டிய கடகம், மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம்,தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் கட்டணம் செலுத்தி,அவர்களே 12 அடி உயரகுருபகவானுக்கு அபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை குருமூர்த்தி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.