உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் குருபெயர்ச்சி விழா!

திருவொற்றியூர் குருபெயர்ச்சி விழா!

திருவொற்றியூர்: திருவொற்றியூரில், அருள்மிகு தட்சிணாமூர்த்தி கோவிலில், குருபெயர்ச்சி விழா நடைபெற்றது.வட சென்னை, திருவொற்றியூரில் அருள்மிகு தட்சிணாமூர்த்தி, 10 அடி உயரத்தில், வடக்கு முகமாக அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதனால், வட குரு ஸ்தலம் என,அழைக்கப்படுகிறது.வட குரு ஸ்தலத்தில்குருபெயர்ச்சி மகோற்சவம், மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் காலை, 8:00 மணி முதல் 12:30 மணி மற்றும் மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, லட்சார்ச்சனைநடைபெற்றது. நேற்று காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை லட்சார்ச்சனை, மதியம் 2:55 மணி முதல் மாலை, 6:00 மணி வரை கணபதிஹோமம், குருப்பெயர்ச்சி பரிகார ஹோமம், விசேஷ அபிஷேகம், மகாதீபாரானை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (14ம் தேதி) காலை, 8:00 மணி முதல் பகல், 12:00 மணி வரை ருத்ராபிஷேகமும், மாலை, 5:00 மணி முதல் 8:00 மணி வரை, லட்சார்ச்சனையும் நடைபெறஉள்ளது. இதேபோல், குருபெயர்ச்சியை முன்னிட்டு, குரு ஸ்தலமான சென்னை பாடி, திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !