அவிநாசி குரு பெயர்ச்சி விழா!
ADDED :4139 days ago
அவிநாசி : குரு பெயர்ச்சியை முன்னிட்டு, அவிநாசி கோவி லில் சிறப்பு ஹோமம், வழிபாடுகள் நடந்தன. குரு பகவான், மிதுனத்திலிருந்து கடக ராசிக்கு நேற்று மாலை 5.49 மணிக்கு பிரவேசித்தார். அதையொட்டி, கோவில் சபா மண்டபத்தில் குரு பகவானுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தன.சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பிரகார உலா நடந்தது. அதையொட்டி, ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசியில் பிறந்தவர்கள், பரிகார பூஜை செய்தனர். அவிநாசி வட்டா ரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். உட்பிரகாரத்திலுள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதேபோல், அவிநாசி, பைபாஸ் ரோடு அருகிலுள்ள ஷீரடி சாய்பாபா கோவிலிலும் நேற்று குரு பெயர்ச்சி விழா நடந்தது.