உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி வேதாஸ்ரம குருகுலத்தில் காஞ்சி மகான் ஜெயந்தி விழா!

புதுச்சேரி வேதாஸ்ரம குருகுலத்தில் காஞ்சி மகான் ஜெயந்தி விழா!

புதுச்சேரி: கருவடிக்குப்பம் வேதாஸ்ரம குருகுலத்தில், காஞ்சி மகான் பரமாச்சாரியாள் ஜெயந்தி விழா நடந்தது.கருவடிக்குப்பம், ஓம்சக்தி நகரில், வேதாஸ்ரம குருகுலம் அமைந்துள்ளது. இங்கு, சாய் சங்கர பக்த சபா சார்பில், காஞ்சி மகான் பரமாச்சாரியாள் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வேதாஸ்ரம குருகுல மாணவர்களின் வேத கோஷம் முழங்க, காஞ்சி மகா பெரியவர் உருவப்படம் மற்றும் கோ மாதாவுடன் ஓம்சக்தி நகர் பகுதியில் ஊர்வலம் நேற்று நடந்தது. குருகுலத்தில் உள்ள பரமாச்சாரியாளுக்கு, விசேஷ ஆவஹந்தி ஹோமம் நடந்தது. பின்பு, கோ பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப் பட்டது. விழாவில் பிராமண சமூக நலச்சங்கத் தலைவர் கல்யாணம், வேதாஸ்ரம குருகுல முதல்வர் சர்மா மற்றும் பல துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, ராஜா சாஸ்திரி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !