வீரட்டானேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு!
ADDED :4227 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த 13ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் வளாகத்தில் விக்னேஷ்வரபூஜை, புண்ய õகவாசனம், தேவகுருபுரகஸ்பதிக்கு விசேஷ மகா அபிஷேகம் நடந்தது. மாலை 3 மணிக்கு கலச ஸ்தாபனம், பஞ்சாசன பஞ்சமா ஆவரனபூஜை, அக்னிகாரியம், குரு மூலமந்திரம், காயத்திரி மந்திரம், 1008 ஆகுதிகள், விசேஷ பூர்ணாகுதி முடிந்து மாலை 5.55 மணிக்கு நவகிரக குருமூர்த்தி, தட்சணாமூர்த்திக்கு கலசாபிஷேகம் நடந்தது. வெள்ளி கவசத்தில் குருபகவானுக்கு மகா தீபாராதனை, வழிபாடு நடந்தது.