உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுஸ்வானி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

சுஸ்வானி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

விழுப்புரம்: விழுப்புரத்தில் சுஸ்வானி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் சந்தானகோபாலபுரம் கண்ணப்பன் தெருவில்  புதிதாக சுஸ்வானி அம்மன் கோவில் கட்டப் பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 11ம் தேதி காலை திரு.வி.க., வீதியில்  உள்ள சிவன் கோவிலில் இருந்து ஊர்வலம் நடந்தது. மறுநாள் (12ம் தேதி) காலை 9 மணியளவில் ஆச்சார்ய விஜய தர்மதுரேந்தர் சுரிஸ்வர்ஜி  தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, பரோடாவைச் சேர்ந்த சாஸ்திரி பண்டிட்,  புஷ்கர் பண்டிட் உள்ளிட்டோர் சிறப்பு ஹோமங்களை  செய்தனர். கோவில் மூலஸ்தானத்தில் சுஸ்வானி அம்மன் மற்றும் விநாயகர், சிவன், லட்சுமி, சரஸ்வதி, அன்ன பூரணி, நாகதேவதை, பைரவர்,  ஆஞ்சநேயர் சிலைகளும் பிரதிஷிட்டை செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை சுஸ்வானி அம்மன் அறக்கட்டளை நிர்வாக தலைவர் கவுதம்சந்த்,  நிர்வாகிகள் ஜவுரிலால், பிரசன்சந்த், பிரேம், பிரவீன், சுஷில் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !