சிதம்பரம் ஆனித் திருமஞ்சனம்: பந்தல் அமைக்கும் பணி துவக்கம்!
சிதம்பரம்: நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் மகோற்சவத்தையொட்டி கீழ சன்னதியில் விழா பந்தல் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. ரசித்திப் பெற்ற சிதம்பரம் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமி கோவிலில் ஆனித்திருமஞ்சம் மகோற்சவம் வரும் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையொட்டி தினம் சபாநாயகர் சுவாமி, பஞ்சமூர்த்திகள் வீதிப்புறப்பாடு நடக்கிறது. 3ம் தேதி நடராஜர் திருத்தேரோட்டம், 4ம் ÷ ததி தரிசனம் உற்சவம் நடக்கிறது. ஆனித்திருமஞ்சனம் தரிசனத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறார்கள். அதனால் கோவில் நிர்வாகம் சார்பில் கிழ சன்னதி தெருவில் பந்தல் (கீற்றுக்கொட்டகை) போடும் பணி துவங்கப்பட்டு நடக்கிறது. அதேப்போன்று கோவிலில் பராமத்தப் பணிகளும் செய்யப்படுகிறது. மேலும் வெளியூர் பக்தர்களுக்கு வசதியாக தண்ணீர், கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.