பரமக்குடி தூய பதுவை அந்தோணியார் தேர்பவனி!
ADDED :4135 days ago
பரமக்குடி : பரமக்குடியில், காட்டுப்பரமக்குடி தூய பதுவை அந்தோணியார் சர்ச் திருவிழாவையொட்டி, தேர் பவனி நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு, சிறப்பு திருப்பலியும், வழிபாடுகளும் நடந்தன. பரமக்குடி பங்கு உதவித் தந்தை ஜோஸ்வா வரவேற்றார். கருமாத்தூர் கிறிஸ்து குருத்துவக் கல்லூரி மெய்யியல் ஆசிரியர் சிங்கராஜ் தலைமை வகித்தார். பரமக்குடி பங்குத் தந்தை செயஸ்தியான், சிவகங்கை பல்நோக்கு சமூக சேவை சங்க செயலாளர் சவரிமுத்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினர். திருப்பலியில் "நம்பிக்கையில் தளரவேண்டாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பின்னர் தூய பதுவை அந்தோணியார் அலங்கரிக்கப்பட்ட மின்தீப தேரில் எழுந்தருளி காட்டுப்பரமக்குடி வீதிகளில் வலம் வந்தார். தேர்பவனிக்குப் பின் கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.