பதினெட்டாம்படி கருப்பன சுவாமி கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4133 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே தோட்டாமங்கலம் விநாயகர் மற்றும் பதினெட்டாம்படி கருப்பன சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த இரு நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகள் துவங்கின. நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு மேல் கடம் புறப்பாடு முடிந்து, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க காலை 9 மணிக்கு கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.