அம்மன் சிலையை சுற்றி வந்த நல்ல பாம்பு: பக்தர்கள் பரவசம்!
ADDED :4131 days ago
திருவண்ணாமலை: பிரசித்தி செங்கம் அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் சிவன் கோவிலில் நேற்று ஆனி மாத பிறப்பு சிறப்பு பூஜை நடைபெற்று கொண்டிருந்தது, அப்போது கோயிலில் உள்ள அம்மன் சிலையை நல்ல பாம்பு ஒன்று சுற்றி வந்தது. அம்மன் சிலையை சுற்றி வந்த நல்ல பாம்பு, படம் எடுத்து நின்றதை கண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர். <ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.