உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்!

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்!

கடலூர்: கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வந்த வைகாசிப் பெருவிழா நேற்று நிறைவு பெற்றது. கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில்  வைகாசிப் பெருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனையைத் தொடர்ந்து காலையில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், மாலையில் மண்டகப்படி பூஜையும், இரவில் பல்வேறு வாகனங்களில்  சுவாமி வீதியுலாவும் நடந்து வந்தது. அதில் முக்கியமாக 5ம் நாளான கடந்த 8ம் தேதி இரவு தெருவடைச்சானிலும், 9ம் தேதி இரவு வெள்ளி ரதத்தி லும் சுவாமி வீதியுலா நடந்தது. 10ம் தேதி இரவு திருக்கல்யாணம் மற்றும் பாரி வேட்டையும், 12ம் தேதி காலை தேர் திருவிழா நடந்தது. பத்தாம்  நாளான கடந்த 13ம் தேதி காலை நடராஜன் திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி உற்சவமும், இரவு முத்துப்பல்லக்கில் பஞ்சமூர்த்திகள்  ராஜ வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் தெப்பல் உற்சவத்தையொட்டி, மாலை 5:00 மணிக்கு உற்சவர் முருகருக்கு சிறப்பு அபிஷேகமும், பின்னர்  சிறப்பு அலங்காரத்தில் இரவு 8:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சர்வ அலங்காரத்தில் புறப்பாடாக, சிவŒக்கர தீர்த்த  குளத்தில் எழுந்தருளி, அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் ஏழு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மாட வீதியுலா நடந்தது.  இறுதி நாளான நேற்று இரவு 8:30 மணிக்கு சண்டேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலாவுடன் வைகாசி பெருவிழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !