மதுரை வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4200 days ago
மதுரை : மதுரை கூடல்நகர் அசோக்நகர் முதல் வீதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 4ல் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், கோ பூஜை, ருத்ர விதான பூஜை, அபிஷேகம், நடராஜர் முக்கனி அபிஷேகம், பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு ஐயப்பன் அபிஷேகம், திருவிளக்கு பூஜை நடக்கிறது. நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள விரும்புவோர் அதற்கான தொகையை செலுத்தலாம். விவரங்களுக்கு 98430 14721ல் தொடர்பு கொள்ளலாம், என அர்ச்சகர் பாஸ்கர வாத்தியார் தெரிவித்தார்.