உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்று முக சந்தனக்காப்பு அலங்காரத்தில் ராஜகணபதி!

மூன்று முக சந்தனக்காப்பு அலங்காரத்தில் ராஜகணபதி!

காரைக்கால்: கோவில்பத்து ஸ்ரீ ராஜகணபதி மூன்று முகங்கள் கொண்ட சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்கதர்களுக்கு காட்சி அளித்தார்.  காரைக்கால் கோவில்பத்து பாரதியார் சாலையில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி கோவிலில் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவர்  ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.பின் ராஜகணபதிக்கு மூன்று முகங்கள் கொண்ட கணபதியாக சந்தனக்காப்பு  அலங்காரத்தில் செய்யப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி  தரிசனம் செய்தனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !