திருப்பூர் ஐயப்பன் கோவிலில் புஷ்பாஞ்சலி!
ADDED :4202 days ago
திருப்பூர் : திருப்பூர் ஐயப்பன் கோவிலில், நேற்று புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள ஐயப்பன் கோவிலில், ஸ்ரீ சபரி குரூப்ஸ் பக்தர்கள் குழு சார்பில் புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. இதையொட்டி, ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. அதன்பின், தாமரை, அரளி, ரோஜா, துளசி, சம்பங்கி, மரிக்கொழுந்து, முல்லை, மருகு, பிச்சிப்பூ, வில்வம் உள்ளிட்ட பல்வகை பூக்களால் புஷ்பாஞ்சலி நடந்தது. அதன்பின், ஐயப்பனுக்கு மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.