கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண மகோத்சவம்
ADDED :4129 days ago
பாபநாசம்: பாபநாசம் அருகே, நல்லூர் கிரிசுந்தரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண மகோத்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் பழங்கள், புடவை, பலகாரங்கள் ஆகிய சீர் வரிசைகள் எடுத்து வந்தனர். பின், கிரிசுந்தரி, கல்யாண சுந்தரேஸ்வரர் ஸ்வாமிகளுக்கு பட்டாடைகள், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, திருக்கல்யாண மகோத்சவம் நடந்தது. தொடர்ந்து, ஸ்வாமி வீதியுலா காட்சி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ராஜசேகரன், பஞ்சாயத்து தலைவர் கணேசன், போஸ்ட் மாஸ்டர் ராஜகோபாலன், கோபாலய்யர், ஓய்வு பெற்ற தாசில்தார் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சிதம்பரம் பாலசுப்ரமணியன் ஆடிட்டர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.