ஐம்பொன் சிலைகள் யாழ்பாணம் பயணம்!
ADDED :4180 days ago
கும்பகோணம்: சுவாமிமலையில் வடிவமைக்கப்பட்ட நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் ஆகியோரது ஐம்பொன் சிலைகள், இலங்கை, யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இலங்கை, யாழ்ப்பாணம் புத்தூரில் உள்ள காரைக்கடல் வைரவர் கோவிலில் வைத்து வழிபடுவதற்காக, அக்கோவில் நிர்வாகிகளில் ஒருவரான மழவராயர், சுவாமிமலையில், ஜெயம் இண்டஸ்ட்ரீஸ் சிற்ப கூடத்தில் நடராஜர், சிவகாமிஅம்பாள், மாணிக்கவாசகர் ஆகியோரது சிலைகளை வடிவமைத்து தருமாறு கோரினார். அதன்படி, சிற்பக் கூட ஸ்தபதிகள் ராதாகிருஷ்ணஸ்தபதி, கண்டஸ்தபதி, சுவாமிநாதஸ்தபதி ஆகியோர், 85 கிலோ எடையில், 1.75 லட்சம் மதிப்பீட்டில் மூன்றடி உயரமுள்ள நடராஜர், இரண்டடி உயரமுள்ள சிவகாமிஅம்பாள், ஒன்றரைஅடி உயரமுள்ள மாணிக்கவாசகர் ஆகியோரது ஐம்பொன் சிலைகளை வடிவமைத்து, கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தனர்.