உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்தபெருமாள் கோவிலில் ஜூலை 4ம் தேதி சம்ப்ரோஷணம்

உலகளந்தபெருமாள் கோவிலில் ஜூலை 4ம் தேதி சம்ப்ரோஷணம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் மூலஸ்தான கருவறை மற்றும் கோபுர கலசங்கள் புணரமைத்து வரும் 4ம் தேதி மகா சம்ப்ரோஷணம் நடக்கிறது. நடுநாட்டு திருப்பதி, 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் திருவிக்ரம சுவாமி, புஷ்பவல்லித்தாயார், ராமர், வரதராஜர், விஷ்ணு துர்க்கை, வாமனர் சன்னதிகள், விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள் ளது. இதற்கான மகா சம்ப்ரோஷணம் அடுத்த மாதம் 4ம் தேதி நடக்கிறது. வரும் 30ம் தேதி காலை 9 மணிக்கு பகவத் அனுக்ஞை, புண்யாகவாசனம், சுக்த சுதர்சன ஹோமங்கள், அகல்மஷ ஹோமம், ரசா பந்தனம், மகா சாந்தி ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 4ம் தேதி 9.10 மணிக்கு மகா சம்ப்ரோஷணம் நடக் கிறது. விழா ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச் சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத் தினர் மேற் கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !