ஈஸ்வரன் கோவில் உண்டியல் திறப்பு
ADDED :4129 days ago
ஈரோடு: ஈரோடு, ஈஸ்வரன் கோவில் உண்டியலில், காணிக்கை எண்ணும் பணிகள், நேற்று நடந்தது. ஈரோடு, ஈஸ்வரன் கோவிலில் உள்ள உண்டியர்கள், திறந்து எண்ணப்பட்டது. அதில், இரண்டு லட்சத்து, 32 ஆயிரத்து, 787 ரூபாய் ரொக்கப்பணம், நான்கு கிராம் தங்கம், 80 கிராம் வெள்ளியும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அறநிலையத்துறை உதவி ஆணையர் சபர்மதி, செயல் அலுவலர் விமலா மற்றும் அலுவலர்கள், உடனிருந்தனர்.