நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் பஞ்சகுரோச விழா!
ADDED :4130 days ago
நாகப்பட்டினம்: நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் நேற்று நடந்த பஞ்சகுரோச விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். உஜ்ஜையினி அரசன் அரசகேசரி தனது நேர்த்திக்கடனுக்காக நாகைக்கு வந்து, நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயரோகணசுவாமியை தரிசித்து தனது பரிவாரங்களோடு,சுவாமியை பல்லக்கில் ஏற்றி,ஏழு ஊர்களுக்கு பஞ்சகுரோச யாத்திரை நடத்திய நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில், நாகை, நீலாயதாட்சி அம்மன் கோவில் பஞ்சகுரோச விழா நேற்று நடந்து. இதையடுத்து நேற்று அம்பாளுடன் பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி, பொய்கை நல்லூர், பாப்பாக்கோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்களில் சிவாலயங்களுக்கு சென்று திரும்பி,நாளை (இன்று) கோவிலுக்கு திரும்பினார்.இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.