உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் லட்சார்ச்சனை!

தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் லட்சார்ச்சனை!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் தென்குடி திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவில் (குரு பரிகார ஸ்தலம்) குருபெயர்ச்சி லட்சசார்ச்சனை நடந்தது. இதில்  பரிகார ராசிகாரர்கள் பங்கேற்றனர். குருபரிகார தலமான திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் வியாழக்கிழமை ஏகதின லட்சார்ச்சனை  நடைபெற்றது. குருபகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு கடந்த 13-ம் தேதி பெயர்ச்சி அடைந்தார்.இதையொட்டி, திட்டை வசிஷ்÷ டஸ்வரர் கோயிலில் நேற்று ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8  மணி வரையும் நடைபெற்ற ஏகதின லட்சார்ச்சனையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !