தாடிக்கொம்பு கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவர் பூஜை!
ADDED :4403 days ago
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பைரவர் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பால், சந்தனம், இளநீர், பன்னீர், திருமஞ்சனம் தேன், உள்ளிட்ட அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை, மாலையிலும் ஆறுகால பூஜைகள் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு "ஹரே ராமா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பால் அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு திருமஞ்சன பொடி பிரசாதம் வழங்கப்பட்டது.