உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் விழா நடத்துவதில் பிரச்னை; ஆரியநல்லூரில் போலீஸ் குவிப்பு

கோயில் விழா நடத்துவதில் பிரச்னை; ஆரியநல்லூரில் போலீஸ் குவிப்பு

சின்னாளபட்டி; ஆரியநல்லூர் கோயில் விழா நடத்துவதில் இரு தரப்பு பிரச்னை காரணமாக, முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


ஆத்தூர் ஒன்றியம் முன்னிலைக்கோட்டை அருகே ஆரியநல்லூரில், காளியம்மன், பகவதி அம்மன் கோயில்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும், அனைத்து சமுதாய மக்களும் இணைந்து திருவிழா நடத்தி வந்தனர். 2013ல் வழிபாட்டு முறையில் முதல் மரியாதை, வரவு செலவு கணக்கு ஒப்படைத்தல் ஆகியவற்றில், இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு தரப்பினர் தனித்தனியே திருவிழா நடத்தவும், மற்றொரு தரப்பினர் அனைவரும் இணைந்து நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர். நேற்று முன்தினம் ஆத்தூர் தாசில்தார் சுரேஷ் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. தீர்வு காணப்படவில்லை. நேற்று, ஒரு தரப்பினர் கோயில் வளாகம் முன்பு முகூர்த்தக்கால் ஊன்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர், போலீஸ், வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வருவாய்த்துறையினர் முகூர்த்தக்காலை அகற்றினர். இப்பிரச்னை தொடர்பாக, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ததால் கலைந்தனர். பாதுகாப்பிற்காக, அப்பகுதியில் போலீசார் குப்பிக்கப்பட்டு உள்ளனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !