உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி அம்மன் கோயில் திருவிழா

பகவதி அம்மன் கோயில் திருவிழா

கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே கொரசின்னம்பட்டி முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஜூலை 7ல் கிராம தெய்வங்களுக்கு கனிவைத்தல் நிகழ்ச்சியுடன் இக்கோயில் திருவிழா துவங்கியது. அதிகாலை 2:00 மணிக்கு வாணவேடிக்கையுடன் பகவதி அம்மன் தங்கத்தேரில் பவனி வந்தார். ஜூலை 8ல் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அலங்காரத்தில் காளியம்மன் பவனி வந்தார்.

நேற்று அதிகாலை பக்தர்கள் மாவிளக்கு, முளைப்பாரி, தீச்சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும், கிடாய் வெட்டியும் காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாலை அம்மன் மஞ்சள் நீராட்டுதலுடன் பூஞ்சோலை சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !