உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் அன்னதானம்

சபரிமலையில் அன்னதானம்

மதுரை: மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் தமிழ் மாநில அமைப்பு 75 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலையில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்குதல், ஸ்ட்ரக்சர் சேவை உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. இந்தாண்டு அன்னதானம் வழங்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி இடம்பெற்றுள்ளனர். இக்குழு சபரிமலை வரும் பக்தர்களுக்கு அனைத்து நேரங்களிலும் அன்னதானம் செய்யவும், பிற உதவிகளை செய்யவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என செயலாளர் அய்யப்பன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !