உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் தடுப்பு சுவர் மழையால் சரிந்தது

திருத்தணி முருகன் கோவிலில் தடுப்பு சுவர் மழையால் சரிந்தது

திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் தேர் வீதியில் ஏற்படுத்திய தற்காலிக தடுப்பு சுவர், மழையால் நேற்று சரிந்தது.


திருத்தணி முருகன் மலைக்கோவிலில், ராஜகோபுரம் – தேர் வீதியை இணைக்கும் பகுதியில் இருந்த கோபுரம், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. அதன்பின், அப்பகுதியில் பக்தர்கள் செல்லாத வகையில், கோவில் நிர்வாகம் சார்பில், தற்காலிகமாக தடுப்பு சுவர் ஏற்படுத்தியும், மண் கொட்டியும் ‘பேரிகேட்’ வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை, ஒரு மணி நேரம், திருத்தணி நகரம் மற்றும் மலைக்கோவிலில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால், தற்காலிக தடுப்பு சுவர் திடீரென சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, பக்தர்கள் யாரும் அங்கு செல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நேற்று முன்தினம், முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், நுாறு கால் மண்டபத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. தொடர்ந்து, முருகன் கோவில் மற்றும் உபகோவில்களில் தீ விபத்து, கட்டடம் இடிந்து விழுதல் போன்ற நிகழ்வுகளால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !