வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :22 hours ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் கோயிலில் நேற்று முன் தினம் மாலை புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7:40 மணிக்கு மேல் இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, கும்பங்கள் புறப்பாடுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது. காலை 9:40 மணிக்கு மேல் மூலவர் விமானம், பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையில் போலீசார், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.