உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சியில் சிறுவர்களுக்கு பூணுால் அணிவிக்கும் உபநயன விழா

செஞ்சியில் சிறுவர்களுக்கு பூணுால் அணிவிக்கும் உபநயன விழா

செஞ்சி: தமிழ்நாடு பிராமணர் சங்கம் விழுப்புரம் மாவட்டம் மற்றும் செஞ்சி கிளை சார்பில் சிறுவர்களுக்கு பூணுால் அணிவிக்கும் உபநயன விழா செஞ்சியில் நடந்தது. மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாநில ஆலோசகர்கள் தியாகராஜன் ஸ்ரீதர் சாஸ்திரி, நடராஜன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் வெங்கடேஷ், இணைச் செயலாளர்கள் வெங்கட்ராமன், சீனிவாசன், விழுப்புரம் மாவட்ட பொதுச் செயலாளர் தண்டபாணி, துணைத் தலைவர் சந்திரசேகர், மகளிர் அணி செயலாளர் ஜெயஸ்ரீ, இளைஞரணி செயலாளர் ராமசுப்பு, செயலாளர்கள் ராமச்சந்திரன், லட்சுமணன், நடராஜன் மற்றும் செஞ்சி கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை மாநில செயலாளர் குமார், அமைப்புச் செயலாளர் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !