இன்று ராகு,கேது பெயர்ச்சி: கோயில்களில் சிறப்பு பூஜை!
ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, இன்று, (21ம் தேதி) அனைத்து கோயில்களிலும் சிறப்பு பரிகார பூஜைகள் நடக்கிறது. இன்று காலை, 11.18 மணிக்கு ராகுபகவான், துலாம் ராசியில் இருந்து, கன்னி ராசிக்கும், ஸ்ரீகேது பகவான், மேஷ ராசியில் இருந்து, மீன ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார். ராகு பெயர்ச்சியால், ரிஷபம், மிதுனம்,சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களும், கேது பெயர்ச்சியால், மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களும் பரிகார பூஜை செய்து கொள்ள வேண்டும்.
இதற்காக கோவிலில், இன்று சிறப்பு பூஜை, வேள்விகள் நடக்கிறது. விசேஷ யாகத்தில், சங்கல்ப பூஜையில் பங்கேற்கும் பக்தர்கள், யாகத்துக்கு தேவையான புஷ்பம், மந்தாரை, செவ்வல்லி, பால், தயிர், நெய், உளுந்து, கொள்ளு, இளநீர், யாக திரவியங்கள் வழங்கி வழிபட்டு வருகின்றனர்.