உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நின்ற நாராயணப்பெருமாள் கோயில் தெற்குவாசல் திறக்க கோரி போராட்டம்!

நின்ற நாராயணப்பெருமாள் கோயில் தெற்குவாசல் திறக்க கோரி போராட்டம்!

சிவகாசி: திருத்தங்கல் நின்றநாராயணப்பெருமாள் கோயில் தெற்கு வாசலை திறக்க கோரி விஸ்வ ஹிந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர்  கோயிலுக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான நின்ற நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக் கோயிலில் 4 மாதங்களுக்கு முன் அப்போது இருந்த கோயில் நிர்வாக அதிகாரி அஜித், ஆகம விதிப்படி கோயில்  கிழக்கு வாசல்தான் திறந்து இருக்க வேண்டும். தெற்குவாசல் திருவிழா காலங்களில் திறக்கப்படும் என கூறி தெற்குவாசலை பூட்டினார். இதனை  எதிர்த்தும், தெற்கு வாசலை திறந்து விட வேண்டும் என பக்த சபையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது தெற்குவாசலின் பிரதான வாயில் இரு ம்பு கேட் பூட்டப்பட்டு, ஓரமாக ஒவ்வொரு பக்தர்களாக செல்லும் அளவிற்கு பாதை வசதி செய்து இருந்தனர்.  இந்நிலையில் நேற்று இரவு 7  மணிக்கு விஸ்வ ஹிந்து பரிசத் மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி, துணை செயலாளர் வெங்கிடசாமி, ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் சிவலி ங்கம், மாரிமுத்து, பாலசுப்பிரமணியன் உள்பட 100 பேர் தெற்கு வாசலை திறக்க வேண்டும் என கோயிலை முற்றுகையிட்டனர்.  போலீஸ்  இன்ஸ்பெக்டர் பொம்மையசாமி பேசியும் கலைந்து செல்லவில்லை. இந்து அறநிலைய துறை ஆய்வாளர் தேவராஜ், கோயில் நிர்வாக அதிகாரி மு ருகன் போலீசாரிடம் கூறுகையில், தெற்கு வாசலை திறக்க கூடாது என மாவட்ட கோர்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கோயில்  நிர்வாகத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது என்றனர்.  செங்கமலதாயர் சன்னதியில் இரவு பூஜைக்கு பின் அர்ச்சகர்கள் கதவை பூட்டினர்.  உடனே மைய மண்டபத்தில் உட்கார்ந்து இருந்த போராட்ட குழுவினர் கோயில் கதவை அடைக்க விடாத வகையில் கருவறை முன் உட்கார்ந்து  உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தெற்கு வாசல் கதவை திறந்தால்தான் போராட்டத்தை கைவிடுவதாக கூறி இரவு9.30 மணிவரை உள்ளிருப்பு  போராட்டத்தை தொடர்ந்தனர். சிவகாசி தாசில்தார் முகமது ரபிக்கான் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !